அதிமுக நிர்வாகிகள் அனைவரும் பயத்துல பேசிட்டு வறாங்க.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க – வெளிவந்த சசிகலா ஆடியோ!
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து சென்னை திரும்பினார் சசிகலா. இவர் அரசியலில் இறங்கி பட்டைய கிளப்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அரசியலை விட்டு ஒதுங்கி, ஆன்மீக பயணம் மேற்கொள்ளப்போகிறேன் என்று அதிரடியாக அறிவித்தார்.
அதன் பிறகு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை தழுவியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சசிகலா அதிமுகவை கைப்பற்ற முழு வீச்சில் இறங்கியுள்ளார். இதனை அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்தும் விதமாக அதிமுக தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். அவரும் பேசும் ஆடியோ வெளிவந்து கொண்டிருப்பதால் அதிமுகவினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ஆடியோக்கள் வெளிவாகி வருவதால் ஓபிஎஸ், ஈபிஎஸ் கடுப்பானார்கள். யாராவது சசிகலாவிடம் பேசினால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அதிரடியாக தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். ஓபிஎஸ் – ஈபிஎஸ்சின் இந்த மிரட்டலுக்கு சசிகலா அஞ்சுவதாக இல்லை. தொடர்ந்து தொண்டர்களிடம் சசிகலா பேசிக்கொண்டு தான் வருகிறார்.
இந்நிலையில் திருவாரூரை சேர்ந்த விஷ்வ கணேஷ் என்ற தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில், அதிமுக நிர்வாகிகள் பயத்தில் ஏதேதோ பேசிக் கொண்டு வருகிறார்கள்.
இவர்களெல்லாம் பேசுவதைப் பார்த்தால் தொண்டர்களின் எழுச்சியை கண்டு பயந்து இருப்பது போல் தெரிகிறது. தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் வந்துவிடுவேன் கவலைப்படாதீர்கள். மேலும், அம்மா மாதிரி நிச்சயம் கட்சியை கொண்டு வருவேன்.
ஆட்சியை கண்டிப்பாக பிடிப்போம். அம்மாவும் சரி எம்ஜிஆரும் சரி தொண்டர்களை நம்பியே ஆட்சி நடத்தினார்கள். விரைவில் நான் வந்து அனைத்தையும் சரி செய்கிறேன் என்று ஆடியோவில் பேசியுள்ளார்.