தமிழகத்தில் நாளை கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முதல்வர் இன்று அறிவிப்பு
நாளையுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று தமிழக அரசு வெளியிட உள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் தமிழகத்தில் குறைந்துக் கொண்டு வருகிறது. இருந்தாலும், கொரோனா தொற்று கோவை, திருப்பூர், நாகப்பட்டினம், ஈரோடு, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறையவில்லை.
இதனால், இந்த 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அளிக்க உள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பல தளர்வுகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் என்னென்ன என்பதை தமிழக அரசு இன்று அறிவிக்க இருக்கிறது. 8 மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
