இனி யாராவது சசிகலாவிடம் பேசினால் இதுதான் தண்டனை : அதிமுக கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

tamilnadu-politics
By Nandhini Jun 18, 2021 09:28 AM GMT
Report

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று திரும்பினார் சசிகலா. சசிகலா அரசியலில் இறங்கி பட்டைய கிளப்புவார் என்று அரசியல் வாதிகள் எதிர்பார்த்த நிலையில், திடீரென அரசியலிலிருந்து ஒதுங்கி ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளப்போகிறார் என்று அறிவித்தார்.

இதனையடுத்து, நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. திமுக அமோகமாக வெற்றி பெற்று, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அதிமுகவுக்கு எதிரான எதிர்ப்பலைகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அரசியலுக்கு வருவேன், அதிமுகவை மீட்பேன், கட்சியை சிதைந்து போக விடமாட்டேன். என்னை அதிமுகவிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது என்பது போன்ற வாக்குறுதிகளை அவர் நிர்வாகிகளிடம் கொடுத்து வருகிறார்.

இனி யாராவது சசிகலாவிடம் பேசினால் இதுதான் தண்டனை : அதிமுக கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்! | Tamilnadu Politics

இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சசிகலாவிடம் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பெரம்பலூர் மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது தொலைபேசியில் பேசினாலோ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.