முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்ய தனிப்படை தீவிரம் !
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்வதாக கூறி 5 ஆண்டுகள் ஏமாற்றி கருவை கலைக்க வைத்ததாக நடிகை சாந்தினி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார்.
முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை அளித்த புகாரமனு விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை சாந்தினி திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதற்கு, அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்றும், தன்னை கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இது குறித்து, வழக்குப் திவு செய்த போலீசார் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். முன் ஜாமீன் வழங்ககூடாது என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

நடிகை சாந்தினி தரப்பிலும் வழக்கறிஞர் முன் ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய அடையாறு மகளிர் காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.