டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் காந்தியை குடும்பத்துடன் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

tamilnadu-politics
By Nandhini Jun 18, 2021 07:25 AM GMT
Report

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக நேற்று டெல்லிக்கு சென்றார். மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

தடுப்பூசி தட்டுப்பாடு, நீட்தேர்வு, ஹைட்ரோகார்பன், ஜிஎஸ்டி நிலுவை தொகை, எழுவர் விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி மோடியுடன் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை மனைவி துர்காதேவியுடன் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார் .

இதுகுறித்து ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழகத்தை வளமான மாநிலமாக உருவாக்குவதில் திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து செயலாற்றும் என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.கஸ்டாலினை தானும் சோனியா காந்தியும் சந்தித்து பேசியதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வளமான, வலிமையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற திமுகவுடன் தொடர்ந்து காங்கிரஸ் செயல்படும் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.