ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின் சென்றது ஏன்? காரணம் இதுதானாம்!

tamilnadu-politics
By Nandhini Jun 17, 2021 12:23 PM GMT
Report

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து, மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்து கொரோனா பரவலைக் கட்டப்படுத்த மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழக முதல்வரான பிறகு முதன்முறையாக மு.க ஸ்டாலின் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்த அவர் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், எம்பிக்கள் கனிமொழி டி.ஆர். பாலு உள்ளிட்ட பலர் உடன் சென்றிருக்கின்றனர்.

முதல்வராக ஸ்டாலின் இந்தப் பயணத்தில் துர்கா ஸ்டாலினை அழைத்துச் சென்றது ஏன் என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து மு.க.ஸ்டாலின் தனது உடல்நிலையை சரிவர கவனித்துக் கொள்வது கிடையாதாம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலையை கண்காணித்து கொள்ளவும், சரியான நேரத்தில் அவருக்கு சாப்பாடு மற்றும் மருந்துகளை வழங்கவும் துர்கா ஸ்டாலின் உடன் சென்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.