டெல்லியில் முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! எழுவர் விடுதலை குறித்து பேச வாய்ப்பு!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலன் இன்று முதன்முறையாக டெல்லிக்கு சென்றுள்ளார். இன்று காலை 7 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து 7:20 மணிக்கு தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார்.
டெல்லி சென்றடைந்த ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அதனையடுத்து, அங்கிருந்து காரில் டெல்லி ஓடிஐஎஸ் பகுதிக்கு முதல்வர் சென்றார். பின்பு, அறிவாலயம் கட்டிட பகுதிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர், முதல்வர்கள் தங்கும் இல்லத்திற்கு சென்ற அவர், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக சரியாக 4.45 மணிக்கு முதல்வர் இல்லத்திலிருந்து புறப்பட்டார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்தார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் சென்றிருக்கிறார்கள். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், எழுவர் விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.