#StalinGoBacktoModi ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டிங் - பங்கம் செய்யும் நெட்டிசன்கள்
தமிழக ஸ்டாலின், முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றிருக்கிறார்.இந்நிலையில், #StalinGoBacktoModi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு சென்றிருப்பதை விமர்சித்தும், மோடி தமிழகம் வரும் போதெல்லாம், Go back modi என்னும் ஹேஷ்டேக்கிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பல்வேறு ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகிறது.
#StalinGoBacktoModi
— Surya♊ (@Optimist_072) June 17, 2021
Reason for this tag!! pic.twitter.com/jdTxAZEx8I