அதிமுகவின் வளர்ச்சி சசிகலாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - ஜெயக்குமார் ஆவேசம்
சசிகலா கட்சியில் எந்த ஒரு அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும். அதிமுகவை வளர்ச்சியை பார்த்து சசிகலாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆடியோவை வெளியிட்டு வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார்.
இது குறித்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது -
ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது. இந்த ஆட்சியில் பாதுகாப்பு கிடையாது என்பதை காட்டுகிறது.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனை அதிகரித்துள்ளது. சசிகலா கட்சியில் எந்த ஒரு அடிப்படை உறுப்பினராக கூட இல்லை.
அப்படி இருக்கும் போது எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும். அதிமுகவை வளர்ச்சியை பார்த்து சசிகலாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆடியோ வெளியிட்டு வருகிறார்.
அதிமுகவை உடைக்க சசிகலாவின் சூழ்ச்சி தோல்வியடைந்துவிட்டது. தேர்தலை பொறுத்தவரை அதிமுகவுக்கு வெற்றிகரமான தோல்விதான் கிடைத்துள்ளது. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே 3 சதவீத வாக்கு வித்தியாசம் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
