டெல்லியில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போகும் கவுரவம்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக இன்று டெல்லி செல்ல உள்ளார். இன்று மாலை சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நாளை (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி, தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்காக ஸ்டாலினை அழைத்து வர தன் சிறப்பு பாதுகாப்பு படையின் “புல்லட் புருப்” காரை பிரதமர் மோடி அனுப்புகிறார். இது போன்ற சிறப்பு கவுரவம், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்குத்தான் கிடைத்துள்ளது. இவர்களைத் தொடர்ந்து தற்போது மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
