அதிமுகவினரை நீக்குவது அதிர்ச்சியை அளிக்கிறது... என்ன சொன்னாலும் அதிமுகவை விட்டு விட மாட்டேன் - சசிகலா!
எதிர்க்கட்சியாக இருக்கும் போதே புகழேந்தி உள்ளிட்டவர்களை அதிமுக நீக்கியது அதிர்ச்சியாக உள்ளது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் தொலைபேசியில் தொடர்ந்து வருகின்றனர். இதனால், அதிமுக கட்சியிலிருந்து ஒருவர் ஒருவராக நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதனையடுத்து, நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதில், யாரெல்லாம் சசிகலாவுடன் போனில் பேசினார்களோ அவர்கள் அனைவரையும் அதிமுக கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்படுவார்கள்.
இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், சசிகலாவின் 42வது ஆடியோ ரிலீஸ் ஆனாது. அந்த ஆடியோவில் நெல்லையை சேர்ந்த பாரதி என்பவருடன் சசிகலா பேசியுள்ளார். அதில், புகழேந்தி உள்ளிட்டவர்களை கட்சியிலிருந்து நீக்கியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
தொண்டர்கள் தன்னுடன் இருப்பதால் அதிமுகவை சரி செய்துவிடலாம். என்ன சொன்னாலும் அதிமுகவை விட்டு விட மாட்டேன் என்று அந்த ஆடியோவில் சசிகலா கூறியிருக்கிறார்.