எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு!
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை தழுவியது. இனையடுத்து, சட்டமன்ற பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவரானார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர், அதிமுக கொறடா உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இது குறித்த ஆலோசனைக் கூட்டங்களில் இழுபறி நீடித்து வந்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று 3-வது முறையாக கூடியது. சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், துணை கொறடாவாக அரக்கோணம் எம்.எல்.ஏ ரவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் சசிகலாவுடன் உரையாடுவோரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்க வேண்டும் என்றும், அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.