மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பதிவிட்ட கிஷோர் கே சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் கைது
முன்னாள் முதல்வர்கள் அண்ணா முதல் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பதிவிட்டு வந்த கிஷோர் கே சாமி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக தகவல் தொழில் நுட்ப காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் பம்மல் சங்கர் நகர் போலீசில் கிஷோர் மீது புகார் கொடுத்தார். இதன் புகாரின் அடிப்படையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைதான கிஷோர் கே சாமியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிபதி உத்தரவின் பேரில் 14 நாட்கள் காவலில் கிஷோர் கே சாமி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எம்.பி, எம்.எல்.ஏ, தலைவர்கள், பெண்கள் பற்றி அருவருப்பான பேசுவதை வாடிக்கையாக கொண்டவர் கிஷோர் கே சாமி.
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசியதாக ஏற்கனவே அவர் மீது வழக்கு இருக்கிறது. பெண்களைப்பற்றி குரூரமான கேவலமான பதவிகளை கிஷோர் கே சாமி விட்டதாக ஐகோர்ட்டு ஏற்கனவே கருத்து தெரிவித்த நிலையில், பெண்கள் குறித்த பதிவுகள் அவரது வக்கிரமான புத்தியை காட்டுவதாகவும் ஐகோர்ட்டு கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.