கல்லணையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு - பணிகளை பார்வையிட்டார்!
இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு செல்ல இருப்பதாகவும், கல்லணை கால்வாய்க்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கு சென்றார் முதல்வர். பிறகு, கல்லணைக்கு சென்று, நாளை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் கல்லணையை நேரில் ஆய்வு செய்தார்.
அங்கு நடைபெற்று வரும் மராமத்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின்னர், தஞ்சாவூரில் ரூ.65 கோடி நிதியில் நடைபெற்று வரும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார். பின்னர், திருவாரூர் சென்று அங்கு பணிகளை முடித்துவிட்டு அங்கேயே தங்கி நாளை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்க உள்ளார்.

