சி.வி.சண்முகம் மதுபோதையில் உளறுகிறார் - தேனி கர்ணன் தாக்கு!
அதிமுக தொண்டர்களிடம் சசிகலா தினமும் பேசுவது போல் ஆடியோ தொடர்ந்து வெளியாகிறது. அதிமுகவுக்கு நான் தலைமையேற்க வருவதாக சசிகலா ஆடியோவில் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு வாய்ப்பே கிடையாது. அது நிச்சயம் நடக்கவே நடக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உறுதியாக கூறியிருக்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும்போது, கருவாடு மீன் ஆகலாம், ஆனால் சசிகலா அதிமுகவிற்கும் ஒருபோதும் வரமுடியாது என்று ஆவேசமாக கூறினார்.
இதுகுறித்து கருத்து தேனி கர்ணன் கூறுகையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இப்படி பேசுகிறார் என்றால், அவர் நிதானத்தில் இல்ல. அவருக்கு மட்டும் இந்த ஊரடங்கில் எங்கே டாஸ்மாக் திறந்து இருக்கிறது போல, குடித்துவிட்டு, மது போதையில் தான் சி.வி. சண்முகம் இப்படி உளறுகிறார் என்றார்.
