ஒரு கண்ணில் வெண்ணெய்... ஒரு கண்ணில் சுண்ணாம்பா? - ஜெயக்குமார் ஆவேசம்!

tamilnadu-politics
By Nandhini Jun 09, 2021 04:29 AM GMT
Report

முரசொலி, தினகரன், குங்குமம் மட்டும் நூலகங்கள் வாங்க அரசுத்துறை உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அனைத்து வட்டாரங்களில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நூலகத்திற்கும் தினகரன் நாளிதழ், ஏஜிஎம்டி நூலகத்திற்கு தினசரி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், அதற்கான விபர அறிக்கையை அலுவலகத்திற்கு தவறாமல் அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும், பொது நிதியில் உள்ள நிதி நிலைக்கு ஏற்ப குங்குமம் மற்றும் தமிழ் முரசு நாளிதழ் வாங்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அண்மையில் ஒரு அறிக்கை வெளியானது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘கொரோனாவினால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அனைத்து பத்திரிகைகளின் விற்பனையும் முடங்கியுள்ளது. இந்நிலையில் முரசொலி, தினகரன், குங்குமம் மட்டும் நூலகங்கள் வாங்க அரசுத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பத்திரிகைகளையும் வாங்க உத்தரவிடவேண்டியது தானே? ஏன் ஒரு கண்ணில் வெண்ணெய்! ஒருகண்ணில் சுண்ணாம்பு! ” என்று பதிவிட்டுள்ளார்.