பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்!

tamilnadu-politics
By Nandhini Jun 09, 2021 04:20 AM GMT
Report

தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தற்போது புதிதாக தொடங்கப்பட்டிருக்கிறது. நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, கடந்த மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் ஆகிறது. பதவியேற்ற நாளிலிருந்து அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

கொரோனா நிவாரண தொகை ரூ.4000, 14 இலவச அரிசி மளிகை பொருட்கள், செவிலியர்களுக்கு பணி நிரந்தரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விபத்தில் இழந்த குடும்பங்களுக்கு பணி அரசு வேலை மற்று உதவித்தொகை, முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் என பல்வேறு அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியீட்டு அதிரடி காட்டி வருகிறார்.

இதனையடுத்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் தீர்வுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மக்கள் புகார்கள் தெரிவிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.