முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் அமைச்சர் பிடிஆர் தியாகராஜன்!

tamilnadu-politics
By Nandhini Jun 08, 2021 05:35 AM GMT
Report

என்னை தொடர்புகொண்டு என் கருத்துகளைத் தெரிவிக்கச் சொல்லியும், தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. ஆனால், என்னால் அதை ஏற்கமுடியவில்லை. மன்னிக்கவும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கையின் நீட்சியாக இந்த குறிப்பை பதிவிடுகிறேன் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

தடுப்பூசிகள் மற்றும் நீட் விவகாரத்திற்கு அவர் அறிக்கை மூலமாகவே தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

அமைச்சர் மாண்புமிகு முதல்வர் வெளியிட்ட அறிக்கையின் நீட்சியாக தடுப்பூசிக்கு தற்போது நிலவும் சமநிலையற்ற சந்தை குறித்த அடிப்படை கருத்து ஒற்றுமை ஒன்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

ஏகபோக வாங்கும் சக்தியை கையிலெடுத்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடிய தனித்துவமான நிலையில் உள்ளது ஒன்றிய அரசு. தேவைப்படும் தடுப்பு ஊசிகளையும் வழங்கப்படும் தடுப்பூசிகளும் மத்தியில் நிலவும் மிகப்பெரிய இடைவெளியை கருத்தில் கொள்ளும்போது சந்தை மிகவும் செயல்திறன் அற்றதாகவே காட்சியளிக்கிறது. ஒன்றிய அரசு மட்டுமே தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவேண்டும் என்ற வாதத்திற்கு இது மேலும் வலுச்சேர்க்கிறது. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அனைவரிடம் இருந்தும் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை 100% கொள்முதல் செய்ய வேண்டும் ஒன்றிய அரசு.

மேலும் கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளை முதல் அளவுகோலாக மக்கள் தொகையைக் கொண்டு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மாநிலங்களுக்கு உள்ளே தான் இயங்குகின்றன. எனவே அவர்களுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை நேரடியாக அந்தந்த மாநில அரசுகளிடம் இருந்து தர வேண்டும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மாண்புமிகு பிரதமர் குறிப்பிட்டதைப் போல தேவையான தடுப்பூசிகளை தேவைப்பட்ட அளவிலும் தகுந்த நேரத்தில் மாநிலங்களில் கொள்முதல் செய்ய முடியாத நிலை இருக்கும் போது ஆயிரக்கணக்கான தனியார் மருத்துவமனைகள் எவ்வித ஒழுங்கான முறையில் இல்லாத இரண்டு உற்பத்தியாளர்கள் மட்டுமே இயங்கும் அல்லது ஒளிகோபொலி நிலையை அடைந்த உற்பத்தியாளர்கள் இருக்கும் சந்தையிலிருந்து எப்படி கொள்முதல் செய்ய முடியும்.

கொரோனா மாபெரும் தொற்றை எதிர்த்து போராட உலகின் பல்வேறு அரசாங்கங்கள் force majeure விதிகளை பயன்படுத்தி பொதுவாக நிலவும் நிர்வாக விதிகளைப் புறந்தள்ளி உள்ளனர். அதே வகையில் நமது ஒன்றிய அரசும் உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை 100% கொள்முதல் செய்வது உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையும் முடிவு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவின் சந்தைப் பொருளாதாரத்தின் மதிப்பை அல்லது அதன் நம்பகத்தன்மையையும் எவ்விதத்திலும் சேதப்படுத்தாது.

இறுதியாக மருத்துவம் மாநில பட்டியலை சார்ந்தது என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பலமுறை வலியுறுத்தி உள்ளார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். மருத்துவப்படிப்பு மருத்துவ சேவைகளை வழங்குவதோடு பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ள நிலையில் நீட் தேர்வினை முழுவதுமாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் மருத்துவம் மற்றும் சுகாதாரம் மாநிலப் பட்டியல் சார்ந்தது என்று பலமுறை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்ற வகையில் அந்தந்த மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப தேர்வுகளை நடத்தவும் அதன் அடிப்படையில் மருத்துவத்துறையை மேலாண்மை செய்யவும் பொது சுகாதார சேவைகளை வழங்கவும் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.