வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று - மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

tamilnadu-politics
By Nandhini Jun 06, 2021 09:36 AM GMT
Report

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று நேரில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

தமிழகத்தில் பிரபலமான உயிரியல் பூங்காக்களில் ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று வண்டலூர் பூங்காவில் இருந்த சிங்கம் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மற்ற சிங்கங்கள் சளி தொந்தரவுகளால் அவதிப்பட்டு வருகிறது. இதனால், சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பரிசோதனை முடிவில், 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு தொற்று உறுதியானது. பூங்காக்களில் சிங்கங்கள் நெருக்கமாக இருப்பதால், தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சிங்கங்களின் உடல்நிலை தொடர்பாக அங்குள்ள நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று - மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு! | Tamilnadu Politics