அதிரடியாக அம்மா உணவகத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின்! எதிர்பாராத நேரத்தில் செய்த செயல்!
நடைபெற்று முடிந்த தமிழக பொதுத் தேர்தலில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதில் போட்டியிட்டார். இவருக்கு இளைஞர் அணி தரும் போதும் சரி, சீட் தரும் போதும் சரி, வாரிசு என்ற அடிப்படையிலேயே விமர்சிக்கப்பட்டு வந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து திருவல்லிக்கேணி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். எந்த தெருவையும் விட்டு வைக்கவில்லை. சாக்கடையும், மழைநீரும் கலந்த நீரில் நடந்து சென்று, ஹவுசிங்போர்டு பகுதியை பார்வையிட்டார். மேலும், குப்பை கொட்டுவது முதல் பொது கழிவறையை ஆய்வு செய்தார்.
இவரின் அனைத்து செயல்பாடுகள் மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதுபோக, தடுப்பூசி விழிப்புணர்வு, கொரோனா கால நிவாரண உதவிகளையும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நேரில் வழங்கி வருகிறார். தான் தினந்தோறும் தொகுதியில் செய்யக்கூடிய நடவடிக்கைகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார். இவர் செய்து வரும் ஒவ்வொரு செயல்களும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
அதேபோல் அம்மா உணவகத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் செய்த காரியம் பாருங்க -