ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்தித்தது ஏன்? ஜெயக்குமார்
tamilnadu-politics
By Nandhini
நட்சத்திர விடுதியில் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். சந்தித்து பேசிக்கொண்டது இயல்பான ஒரு விஷயம் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது -
ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சந்தித்து பேசுவது ஒரு இயல்பான விஷயம்தான். இன்றைய ஆட்சி அதிகாரிகளை நம்பி இருக்கிறது. திமுக போன்று 10 பேருக்கு நிவாரணம் அளித்து விட்டு விளம்பரங்கள் தேடும் கட்சி நாங்கள் கிடையாது. முதல்வரின் குரலை மக்களும் கேட்பது இல்லை. அதிகாரிகளும் கேட்பது கிடையாது என்றார்.