தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்!
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், தொற்று குறைந்த மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்கப்படுவதுடன் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -
சென்னையில் மளிகை, பலசரக்குகள் காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக திறந்த வெளியில் சந்தைகள் அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்.
இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி.
அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்படலாம்.
சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒருநாளைக்கு 50% டோக்கன் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளலாம்.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை பதிவுடன் அனுமதி.
மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுய தொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை உடன் பணிபுரிய அனுமதி.
மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செயல்படலாம்.
மிதிவண்டி, இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். வாகனங்களை உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
கல்வி புத்தகங்கள் மற்றும் எழுதுகோல்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
வாகனம் பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இபாஸ் உடன் செல்லலாம்.
வாடகை டாக்சியில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.