ஆடியோ ரிலீஸ் - கே.பி. முனுசாமி பேச்சுக்கு சசிகலா கொடுத்த பதிலடி?
தற்போது அரசியல் வட்டாரத்தில் அவ்வப்போது கட்சி நிர்வாகிகளிடம் சசிகலா பேசுவது போல ஆடியோக்கள் வெளியாகி அதிமுகவினருக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த ஆடியோக்களை சசிகலாதான், தனது உதவியாளர் மூலம் ரிலீஸ் செய்ய வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியது.
சசிகலாவின் அந்த ஆடியோ பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசுகையில், அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்து வருகிறார். குழப்பத்தை ஏற்படுத்தாமல் அவர் அமைதியாக இருந்தால் மிக நல்லது. அவர் என்னதான் பேசினாலும், அதை அதிமுகவினர் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்றார்.
கே.பி. முனுசாமியின் பேட்டியைச் சசிகலாவுக்கு போட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதிமுகவில் முனுசாமி எப்படி வந்தார், எப்படி ஏற்றம் பெற்றார் என்பது அவருக்கே தெரியும். நான் இல்லையென்றால் இப்போது முனுசாமி அதிமுகவில் இடம் பெற்றிருக்க முடியாது. இப்போ கூட, அவர் அவராகப் பேசவில்லை. பழனிசாமியின் பேச்சைக் கேட்டுதான் பேசுகிறார். லாப நட்ட கணக்கு போட்டுத்தான் எல்லோருமே அரசியல் செய்கிறார்கள். என்று ஓப்பனாக சசிகலா பேசியுள்ளார் என்று அவரின் உள்வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
