பொருட்கள் கடத்தப்படுவதும், பதுக்கப்படுவதுமே விலைவாசிக்கு முக்கிய காரணம் - ஓபிஎஸ் அறிக்கை
அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதும், பதுக்கப்படுவதுமே விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமையல் எண்ணெயின் விலை 20 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெயின் விலை 42 சதவீதமும், பருப்புவகைகள் 15 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இவற்றைப் போலவே அரிசி சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளன. விலைவாசி உயர்வுக்கு பல்வேறு பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும், விலை வாசி உயர்வு ஏற்படுவதற்கு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதும் பதுக்கப்படுவதுமே காரணம். ஆகையால் அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
