தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்... விரைவில் சந்திக்க வரேன் - சசிகலா புதிய ஆடியோவால் பரபரப்பு
கொரோனா தாக்கம் குறைந்த பின்பு நான் தொண்டர்களைச் சந்திக்க வருகிறேன் என்று தற்போது சசிகலா பேசும் புதிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா பெங்களூரில் சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த சசிகலா அரசியல் இறங்கி சக்கைபோடு போடுவார் என்று பார்த்தால் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளப்போகிறேன் என்று கூறி அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
அதனையடுத்து, கோவில், கோவிலாகச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். நடைபெற்று முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர இருப்பதாக தொண்டர்களிடம் அவர் பேசிய தொலைபேசி ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, அரக்கோணம் செம்பேடு கிராமத்தின் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசும் 5-வது ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் சசிகலா, தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். புரிகிறது. இந்த கொரோனா தாக்கம் முடிந்த பின்பு தொண்டர்களை எல்லாம் சந்திக்க வருவேன். எதுக்கும் பயப்படாதீங்க. என்று ஆறுதல் சொல்லும் ஆடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக, பரபரப்பாக வைரலாகி வருகிறது.