‘மிஸ் யூ அப்பா’ நீங்கள் இல்லாத வெற்றிடத்தை நான் உணராத நாளே இல்லை! - நடிகை குஷ்பூ!

tamilnadu-politics
By Nandhini Jun 03, 2021 09:30 AM GMT
Report

முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் இன்று (03.06.2021) கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் பிறந்தநாளை பெரிய அளவில் யாரும் கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, அரசியல்வாதிகளும், சினிமாத்துறை பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் பலர் கலைஞர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகை குஷ்பூ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "நான் வெற்றிடத்தை உணராத ஒருநாள் கூட இல்லை. ஒரு குரு என்பவர் கடவுளுக்கு மேலே. நீங்கள் என் சிறந்த ஆசிரியராக இருந்தீர்கள். உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என் மீது பொழிந்துகொன்டே இருக்கும் என்று நான் நம்புகிறேன். மிஸ் யூ அப்பா" என பதிவிட்டுள்ளார்.