‘நவீன தமிழகத்தின் தந்தை’ - உதயநிதிஸ்டாலின் உணர்ச்சிமிகு டுவிட்

tamilnadu-politics
By Nandhini Jun 03, 2021 05:48 AM GMT
Report

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், பெரியாரின் பகுத்தறிவு- தமிழ்நாடு கண்ட அண்ணாவின் மாநில சுயாட்சி இவற்றை பாதுகாத்து-இந்திய ஒன்றிய மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆசானாக நின்ற நம் முத்தமிழறிஞரின் 98வது பிறந்தநாளில் அவர் வழியில் உழைக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம்.

நவீன தமிழகத்தின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞரின் 98வது பிறந்த நாளில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அமைச்சர்கள், கழக நிர்வாகிகளுடன் சென்று கலைஞர் ஓய்வகத்தில் மரியாதை செய்தோம். எளியோர் மேன்மையை அடிநாதமாக கொண்டு உழைத்த கலைஞர் வழியில் பயணிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.