கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் - திருவுருவப் படத்திற்கு வைகோ மலர்தூவி மரியாதை!
இன்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு இன்று காலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று மரியாதை செலுத்தினார். அதனையடுத்து, தமிழகம் முழுவதும் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகையும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் மற்றும் 5 முக்கிய திட்டங்களை இன்று துவக்கி வைத்தார் முதல்வர்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக, மதிமுக பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
