பிச்சை எடுத்திருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்திருப்போம் - வம்பிழுத்தவருக்கு விஜய பிரபாகரன் பதிலடி!
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக போட்டியிட்டது. ஆனால், இத்தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல், தேர்தலில் விருத்தாசலத்தில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை எதற்கு இந்த தேவையில்லாத சீன், போய் பிச்சையெடுத்து பிழைக்கலாமே என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு கூலாக விஜய பிரபாகரன் பதில் அளித்து பேசுகையில், உங்களது மேலான கருத்துக்கு எனது நன்றி. உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முடியாதது எதுவும் இல்லை என்று கூறியுள்ளீர்கள். அதையே நான் பின்பற்றுகிறேன். பிச்சை எடுத்து இருந்தால் நாங்கள் வேற லெவலில் அரசியலில் இருந்திருப்போம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.