கொரோனாவை வெல்வோம்! முழு ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
முழு ஊரடங்கு நீடித்துக்கொண்டே செல்ல முடியாது. முழு ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது -
கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து தான் இன்னொருவரிடம் பரவும். அதனால் நீங்கள் கவனமாக இருங்கள். அதேபோல் மற்றவருக்கு பரப்பாமல் இருக்க, நீங்களும் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடிய சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவல் தானாக குறைந்து விடும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 24 முதல் முழு ஊரடங்கு தளர்வுக்கற்று பிறப்பிக்கப்பட்டிருக்கு. அது மேலும் ஒருவாரத்திற்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த மே 24 முதல் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில்கொரோனா பரவல் குறைந்து வருகிறது. முழு ஊரடங்கால் ஒருசில பிரிவினர் பாதிக்கப்படுகின்றனர்.
இது மறுப்பதற்கில்லை. அதனால் தான் அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.2000 கொரோனா நிவராண தொகை அளிக்கப்பட்டது. அதற்காக முழு ஊரடங்கை நீடித்துக்கொண்டே செல்ல முடியாது. முழு ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். ஒருசிலர் மீறினால் கூட, முழுமையான பலனை அடைய முடியாது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவை வெல்வோம்!
— M.K.Stalin (@mkstalin) June 1, 2021
நமக்கான வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! https://t.co/ux2rbeaOqS