‘நான் வந்துடுவேன்’ - சசிகலா ஆடியோவில் பேசியவர் பரபரப்பு தகவல்!
4 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தீவிரமாக அரசியலில் ஈடுபடுவேன் என்று அதிரடியாக அறிவித்தார். ஆனால், திடீரென்று பின்வாங்கி அரசியலிலிருந்து ஒதுங்கினார்.
அரசியலிலிருந்து ஒதுங்கிய சசிகலா கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து, ஆன்மீகத்தில் மூழ்கினார்.
தற்போது நடைபெற்று முடிந்த 2021ம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இந்நிலையில், எடப்பாடி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு பின்னர் மீண்டும் சசிகலாவின் பேச்சு பரபரப்பாக அடிபட்டு வருகிறது.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவை ஒற்றத்தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஆளுக்கொரு திசையில் நின்று முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், சசிகலாவும் அதிமுகவை ஒற்றைத்தலைமையின் கீழ் கொண்டு வர நினைத்துள்ளாராம். மீண்டும் நான் கட்சிக்கு வருவேன். கண்டிப்பாக கட்சியை சரி பண்ணிடலாம். கொரோனா முடிஞ்சதும் நான் வந்துடுவேன் என்று சசிகலா பேசிய ஆடியோ அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த அதிமுக ஐடி விங்க் துணை அமைப்பாளர் வினோத். இவரிடம் சசிகலா பேசிய அந்த ஆடியோதான் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆடியோவில் பேசிய வினோத் பேசியதாவது -
நான் அதிமுக கட்சி நிலவரம் பற்றி சசிகலாவுக்கு கடிதம் எழுதுவேன். அவரும் பதில் கடிதம் அனுப்பி வைப்பார்.
அப்படித்தான் அதிமுகவின் போட்டா போட்டி நிலவரம் குறித்தும், கட்சியினரின் குமுறல்கள் குறித்தும் சசிகலாவுக்கு எழுதி வந்தேன். அந்த சமயத்தில் தான் என்னிடம் சசிகலா திடீரென்று போன் செய்து பேசினார்.
கொரோனா முடிஞ்சதும் வந்து அதிமுகவை ஒற்றத்தலைமையின் கீழ் கொண்டு வருவார். சசிகலா ரிலீஸ் ஆனபோது போஸ்டர் ஒட்டியதிற்கே என் மீது கட்சி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல்தான், இப்போதும் நான் சசிகலாவிடம் பேசியது குறித்து என் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றார் வினோத்.