கொரோனா இறப்பு விபரத்தைக் குறைத்துக் காட்டுகிறார்கள் - எடப்பாடி குற்றச்சாட்டு!
tamilnadu-politics
By Nandhini
கொரோனா இறப்பு விபரத்தைக் குறைத்துக் காட்டுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார்.
ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் ஆக்சன் படுக்கைகள் நிரம்பியுள்ளன. கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா இறப்பு விவரத்தை குறைத்து காட்டுகிறார்கள். இறப்பு விபரத்தை வெளிப்படையாக காட்ட வேண்டும் என்றார்.