‘மோடி வந்து பேசினாலும் தோற்கடிப்பேன்னு ஆயிடுச்சே’ - எஸ்.வி.சேகர்
மோடி வந்து பேசினாலும் தோற்கடிப்பேன்னு ஆயிடுச்சே என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது -
நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக பாஜகவினர் ‘வேல் வேல் வெற்றி வேல்’ என்று முழக்கமிட்டிருந்தனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ‘வேல் யாத்திரை’யை அறிவித்தார்.
ஆளும் அரசு இந்த யாத்திரைக்கு தடை போட்டது. இருந்தாலும், திருத்தணியின் யாத்திரையை தொடங்கினார் முருகன். ஆங்காங்கே யாத்திரை கூட்டம் நடத்தி திருச்செந்தூரில் யாத்திரையை நிறைவு செய்தார். இந்த யாத்திரை பலன் அளிக்காது என்று பலர் கருத்து தெரிவித்தாலும், வேல் யாத்திரை வெற்றி யாத்திரை என்றே பாஜகவினர் பேசினர்.
முருகன்தான் யாத்திரை தொடங்கினார் என்று பார்த்தால், பாஜக துணைத்தலைவர் அண்ணாமலையும் காவடி தூக்கி பரபரப்பு ஏற்படுத்தி விட்டார்.
இவர்களைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும் ‘வேல் வேல் வெற்றி வேல்’ என்று முழக்கமிட்டனர்.
தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 தொகுதிகளில் மட்டுமேதான் வெற்றி பெற்றுள்ளனர்.
வேல் யாத்திரை நடத்திய முருகனும், காவடி தூக்கிய அண்ணாமலை படு தோல்வியை அடைந்தார்கள். வேல் வேல் வெற்றிவேல் யாத்திரிக்கு பதிலாக ‘இறை நம்பிக்கை யாத்திரை’ என்று நடத்தி கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை ஒன்று சேர்ந்திருக்கலாம்.
மோடியை ராசிபுரத்துக்கு கூப்பிட்டு வந்து, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ‘வேல் வேல் வெற்றி வேல்’ என்று பேசவச்சார்கள். மோடி வந்து பேசினாலும் தோற்கடிப்பேன்னு ஆயிடுச்சே.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
பாஜகவின் தவறுகளை தைரியமாக எடுத்துக் கூறிய எஸ்.வி.சேகருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.