சென்னை ராயபுரத்தில் ஜெயக்குமார் பெயர் கொண்ட கல்வெட்டுகள் அடித்து உடைப்பு?

tamilnadu-politics
By Nandhini May 28, 2021 03:42 AM GMT
Report

சென்னை ராயபுரத்தில் அம்மா மினி கிளினிக் கல்வெட்டுகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெயர் பதிக்கப்பட்டது. இந்த கல்வெட்டுகள் இரவோடு இரவாக உடைத்து அகற்றப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் காலத்தில் தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டது. ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் இந்தத் திட்டத்தை முதன்முதலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது, அங்கு பதிக்கப்பட்ட கல்வெட்டில் முதலமைச்சர் பெயர், சட்டமன்ற உறுப்பினர் பெயர்கள் பதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திமுகவினர் இரவோடு இரவாக அம்மா மினி கிளினிக்கில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரை சுண்ணாம்பு அடித்து மறைத்து விட்டதாக புகார் எழுந்திருக்கிறது.

ராயபுரம், எஸ்.என்.செட்டி தெரு, சேக் மேஸ்த்ரி தெரு, ஜி.ம். பேட்டை தெரு, அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெயர் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளையும், தண்ணீர் குழாய்களையும் திமுகவினர் அடித்து உடைத்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டி இருக்கின்றனர்.