27 ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் - தமிழக அரசு அதிரடி!

tamilnadu-politics
By Nandhini May 26, 2021 10:44 AM GMT
Report

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றதிலிருந்து அதிகாரிகள் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, மேலிடத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் செயலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

தற்போது மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலர் இறையன்பு பணியிட ஆணைச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது -

தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிர்வாக இயக்குநர் மற்றும் பாசனம், விவசாயம் மற்றும் நீர்நிலைகள் புனரமைத்தல் மற்றும் நிர்வாக திட்ட இயக்குநராக இருந்த விபு நாயர், நிலப் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

27 ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் - தமிழக அரசு அதிரடி! | Tamilnadu Politics

திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக இருந்த ஜெயஸ்ரீ ரகுநந்தன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை (பயிற்சி) இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை முதன்மைச் செயலாளராக இருந்த மங்கத் ராம் ஷர்மா, பாசனம், விவசாயம் மற்றும் நீர்நிலைகள் புனரமைத்தல் மற்றும் நிர்வாக திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்.

சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக இருந்த விக்ரம் கபூர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்படுகிறார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சிகி தாமஸ் வைத்யன், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநராக நியமனமிக்கப்படுகிறார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலராக இருந்த பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.