காவிரி ஆற்றை தூர்வாரும் பணியை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!
டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிப்பதற்காக 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்திருக்கிறது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தலைமை ஏற்றதிலிருந்து பல்வேறு அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் 21 அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணியை கண்காணிக்க மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதீப் யாதவ், கோபால், அபூர்வா, கிர்லோஸ் குமார் ஆகிய 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் தஞ்சாவூருக்கும், கோபால் திருவாரூர் மாவட்டத்திற்கும், செல்வி அபூர்வா நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் மற்றும் கிஷோர் குமார் ஐஏஎஸ் மயிலாடுதுறைக்கும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
