விவசாயிகளின் உணர்வுகளை மதித்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
விவசாயிகளின் கோரிக்கைகள், உணர்வுகளை மதித்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
பார்லிமெண்ட் நடைமுறைகளை புறக்கணித்து அவசரம் அவசரமாக கொண்டு வந்த, 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டில்லியில் தங்கள் போராட்டத்தை துவங்கி இன்றுடன் (மே 26) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.
இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை, உணர்வுகளை மதித்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை முன்வரவும் இல்லை, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பது கவலையளிக்கிறது.
எனவே, 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.