உங்கள் பகுதியில் நடமாடும் காய்கறி வாகனம் வரவில்லையா? உடனே இந்த எண்ணுக்கு அழைக்கலாம்!

tamilnadu-politics
By Nandhini May 25, 2021 08:23 AM GMT
Report

சென்னை மாநகராட்சி மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக 1000 நடமாடும் காய்கறி வாகனங்கள் சேவையை கே.கே. நகரில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது -

சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார். அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்வதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் காய்கறி வாகனங்கள் வராத பகுதி குறித்து மக்கள் 044- 45680200 என்ற எண்ணிற்கு அழைத்து சென்னை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.   

உங்கள் பகுதியில் நடமாடும் காய்கறி வாகனம் வரவில்லையா? உடனே இந்த எண்ணுக்கு அழைக்கலாம்! | Tamilnadu Politics