தமிழகத்தில் கொரோனா இறப்புகள் எதுவும் மறைக்கப்படவில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கொரோனா இறப்புகள் எதுவும் மறைக்கப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 77ஆயிரத்து 211 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 20,872 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 15,54,759 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் பத்திரிக்கையாளரிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், 10 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இக்கட்டான நிலை இருந்தது. ஆனால், முதல்வர் எடுத்த நடவடிக்கைகளால் தற்போது ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கையை மறைக்கப்படவில்லை. இன்னும் 2 நாட்களில் கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.