ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் நாளை ஆலோசனை!

tamilnadu-politics
By Nandhini May 21, 2021 03:46 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரும், உயிரிழப்போரும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பிடியில் சிக்கி அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். தமிழக அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 10ம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தினார்.

இந்நிலையில், கொரோனா பரவலால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருவதாலும், கொரேனா பரவலைக் கட்டுப்படுத்தவும் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கலாமா? என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இது குறித்து, நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் நாளை ஆலோசனை! | Tamilnadu Politics