கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு : அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

politics tamilnadu
By Nandhini May 21, 2021 03:34 AM GMT
Report

கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் இழப்பீடு அளிப்பதாக தெரிவித்துள்ளதை அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

சட்டம் ஒழுங்கு- போக்குவரத்து என எப்பணியிலும் அர்ப்பணிப்பைத் தருகிற காவல்துறையினரில் 84 பேர் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் போது உயிரிழந்துள்ளனர். எனவே அவர்களின் 13 வாரிசுகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் 36 குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது!

கொரோனா தாக்கி உயிரிழந்த காவல்துறை குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேலும் 36 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க இன்று ஆணையிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.