சென்னை எஸ்.எஸ்.ஐ வங்கதேச ராணுவத்தால் கைது - திடுக்கிடும் தகவல்கள்!
வங்காளதேச எல்லையில் தமிழக காவல்துறையை சேர்ந்த அதிகாரி சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்எஸ்ஐ கைது
சென்னை தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ ) பணியாற்றி வருபவர் ஜான் செல்வராஜ். இவர் சேலையூர் காவல்நிலையத்தில் கடந்த 6 வருடமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மருத்துவ விடுப்பில் இருந்த அவரை, சட்டவிரோதமாக எல்லையை கடந்ததாக வங்கதேச ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் விசாரணை
மேலும் அவரிடம் இருந்து 7,500 அமெரிக்க டாலர்களுடன் மற்றும் கட்டுக்கட்டாக இந்திய பணமும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போதைப் பொருட்கள் கடத்தல், தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், குற்றவாளிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தவர் சட்ட விரோத கும்பலுடன் தொடர்பா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.