ஹெலிகாப்டர் விபத்து - வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - எச்சரிக்கை விடுத்த தமிழக காவல்துறை

tamilnadu-police-warning
By Nandhini Dec 10, 2021 10:06 AM GMT
Report

ஹெலிகாப்டர் விபத்து குறித்து யாராவது வதந்தி பரப்பிக் கொண்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று முன்தினம், நீலகிரி மாவட்டம், குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இந்தியாவின் ராணுவ முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 11 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் உலக நாடுகளையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதனையடுத்து, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் பரவிக் கொண்டு வருகிறது. இது குறித்து, விமானப்படை சார்பில், ஹெலிகாப்ட்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி வதந்திகளை செய்யாதீர்கள். விபத்துக்கான காரணத்தை அறிய முப்படைகளின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விரைவாக விசாரணை நடத்தி உண்மைகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி, பொய் தகவல் பரப்புவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவு செய்த யூடியூபர் மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.