காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Police
CM
Leave
MK Stalin
Tamilnadu
By Thahir
தமிழக காவல்துறையினர் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பலர் விடுமுறையின்றி தவிப்பதாக தகவல் வெளியானது.இந்நிலையில் தமிழக காவல்துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் முதல் நிலை காவலர்களுக்கு வாரத்தில் ஒரு முறை ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தங்கள் உடல்நலனை பேணிக் காக்கவும்,குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடவும் இந்த ஓய்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காவல்துறையினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.