சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

tamilnadu-police
By Nandhini Oct 18, 2021 10:28 AM GMT
Report

ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு டிஜிபி பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெஞ்சு வலியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நலம் குணமடைந்து இன்று வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில்,சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் சென்னை காவல் ஆணையராக பதவியை அவர் பதவியை தொடருவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி, டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்ற ஏ.கே.விஸ்வநாதன் அவர்கள் – வீட்டு வசதி கழகத்தின் டிஜிபி பணியை தொடருவார்.

டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்ற ஆபாஷ் குமார் – குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவில் தொடர்வார். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சீமாவிற்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.