முப்படை தளபதி பிபின் ராவத் நிலைமை கவலைக்கிடம்? - வெளியான முக்கிய தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்திருக்கிறார்.
சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ராணுவ உயரதிகாரிகள் 14 பேர் சென்ற உயர் ரக ராணுவ விமானம், திடீரென கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு 5 நிமிடங்கலே இருந்த நிலையில், இறங்க வேண்டிய இடமான வெலிங்டனிலிருந்து 10 கி.மீட்டருக்கு முன்னால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் விழுந்த உடன் யாரும் அருகில் நெருங்க முடியாத அளவிற்கு பயங்கரமான தீ கொளுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது. சுமார் 1.5 மணி நேரம் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. விபத்தில் சிக்கிய முப்படை தளபதி பிபின் ராவத் மீட்கப்பட்டு, அவருக்கு கோவை ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பிபின் ராவத்திற்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.