ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடம் - விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேரில் ஆய்வு!

death tamilnadu-pipin-rawat- vr-chaudhary--study
By Nandhini Dec 09, 2021 04:31 AM GMT
Report

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 9 பேர் தமிழகம் வந்தார்கள். இதனையடுத்து, நேற்று சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெலிங்டனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து, ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விமானப்படை சார்பில் நேற்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், விபத்து நடந்த காட்டேரி வனப்பகுதியில் விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருடன் இணைந்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.