2026 தேர்தல் செலவு; திமுகவை விட 10 மடங்கு குறைவாக செலவு செய்த தவெக

Naam tamilar kachchi ADMK DMK Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja Sep 26, 2026 06:39 AM GMT
Report

tamilnadu political parties expenditure in 2026 election: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான செலவு கணக்குகளை அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ததில், திமுகவை விட தவெக 10 மடங்கு குறைவாக செலவு செய்தது தெரிய வந்துள்ளது.

2026 தேர்தல் செலவுகள்

கடந்த மே மாதம் நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான செலவுகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளன.

இதில் அதிகபட்சமாக, திமுக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தலுக்காக சுமார் ரூ.197 கோடி செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2026 தேர்தல் செலவு; திமுகவை விட 10 மடங்கு குறைவாக செலவு செய்த தவெக | Tamilnadu Parties Election Expenditure In 2026

அதிமுக, ரூ.112 கோடி செலவு செய்ததாக தெரிவித்துள்ளது. இதில், ரூ.109 கோடி பொதுத் தேர்தல் பிரசாரத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், வேட்பாளர்களுக்காக ரூ.2.78 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவுகள் அனைத்தும் போக, அதிமுகவிடம் ரூ.296 கோடி நிதி கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக ரூ.51.56 கோடியும், காங்கிரஸ் ரூ.7 கோடியும் செலவு செய்ததாக தெரிவித்துள்ளன.

நாம் தமிழர் கட்சிக்கு ரூ.2.20 கோடி வருவாய் கிடைத்த நிலையில், ரூ.1.37 கோடி செலவிடப்பட்டுள்ளது.  இதில், தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.93.29 லட்சமும், நட்சத்திரப் பேச்சாளர்களுக்காக ரூ.2.30 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. 

2026 தேர்தல் செலவு; திமுகவை விட 10 மடங்கு குறைவாக செலவு செய்த தவெக | Tamilnadu Parties Election Expenditure In 2026

தவெக ரூ.19.8 கோடி

ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம், ரூ.19.8 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது திமுக செலவு செய்துள்ள தொகையில், 10ல் ஒரு பங்கு மட்டுமே ஆகும். 

2026 தேர்தல் செலவு; திமுகவை விட 10 மடங்கு குறைவாக செலவு செய்த தவெக | Tamilnadu Parties Election Expenditure In 2026

இதில், விளம்பரத்திற்காக ரூ.6.34 கோடியும், விஜய்யின் விமான பயண செலவு ரூ.3.54 கோடியும், பிரசார பொருட்கள் ரூ.40.54 லட்சம், பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ செலவு ரூ.2.06 கோடியும் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தலா ரூ.40 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தவெகவின் தொடக்க கையிருப்பு ரூ.3.03 கோடியாக இருந்தது. தேர்தல் காலத்தில் அனைத்து வழிகளிலும் தவெகவிற்கு கிடைத்த வரவுகள் ரூ.7.02 கோடியாகும்.