இன்று முதல் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தீவிரம்!

tamilnadu-oxygen-production
By Nandhini May 19, 2021 03:09 AM GMT
Report

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மருத்துவ ரீதியான ஆக்சிஜன் 4 மாதங்களுக்கு மட்டும் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்தச் சூழ்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு, இன்று முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று மாலை ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது. 

இன்று முதல் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி தீவிரம்! | Tamilnadu Oxygen Production