40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில் மூலம் சென்னைக்கு வந்தது!
நேற்று இரவு ஒடிசா மாநிலத்திலிருந்து 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னைக்கு வந்தடைந்தன.
அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தேவையை பூர்த்தி செய்ய 7-வது முறையாக ரயில் மூலம் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கண்டெய்னர் பெட்டிகள் திருவொற்றியூர் கான் கார் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தது.
இதுவரை மேற்கு வங்கம் தாராபூர், ஜார்கண்ட், ஜம்ஷெட்பூர், ஒடிசா பகுதிகளில் இருந்து கண்டெய்னர் பெட்டிகளில் ஆக்ஸிஜன் ஏற்றி வந்துள்ள நிலையில், ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியிலிருந்து 2 கண்டெய்னர்களில் ஆக்சிஜன் முழுவதும் நிரப்பப்பட்டு 40 டன் உடன் நேற்று இரவு 8 மணி அளவில் திருவொற்றியூர் கான் கார் நிறுவனத்திற்கு வந்தடைந்தது.
இங்கிருந்து லாரிகள் சாலை மார்க்கமாக. அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் தமிழகத்தில் தேவைப்படக்கூடிய ஆக்சிஜன், வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுவரை 7 ரயில்கள் மூலம் 367 டன் ஆக்சிஜன் சென்னைக்கு வந்தடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
